கால்பந்து

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் பங்கேற்பு + "||" + Teams from Spain, England and Germany take part in the Junior Women's World Cup

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் பங்கேற்பு

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் பங்கேற்பு
ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் பங்கேற்க உள்ளன.
மும்பை, 

17 வயதுக்கு உட்பட்ட (ஜூனியர்) பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 17-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை இந்தியாவில் 5 நகரங்களில் நடைபெறுகிறது.

16 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் வடகொரியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதால் தரவரிசை அடிப்படையில் இந்த 3 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.