கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச் + "||" + Champions League Football: Bayern Munich in the final

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பேயர்ன் முனிச் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லிஸ்பன்,

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 3-0 என்ற கோல் கணக்கில் லயன் கிளப்பை (பிரான்ஸ்) தோற்கடித்து 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பேயர்ன் முனிச் அணியில் செர்ஜ் ஞாப்ரி (18 மற்றும் 33-வது நிமிடம்), ராபர்ட் லெவன்டவ்ஸ்கி (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.


முதல் 15 நிமிடங்கள் எதிரணியின் கோல் கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்ட லயன் வீரர்கள், அதன் பிறகு பேயர்ன் முனிச் அணியின் ஆக்ரோஷத்துக்கு பணிந்து விட்டனர். கடைசியாக விளையாடிய 29 ஆட்டங்களில் பேயர்ன் முனிச் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் நடக்கும் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை எதிர்கொள்கிறது.