கால்பந்து

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் நீக்கம் + "||" + Kerala Blasters coach sacked

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் நீக்கம்

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் நீக்கம்
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் கிபு விகுனாவை (ஸ்பெயின்) நேற்று அதிரடியாக நீக்கி இருக்கிறது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணி இதுவரை 18 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 டிரா, 8 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கிபு விகுனாவை (ஸ்பெயின்) கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நிர்வாகம் நேற்று அதிரடியாக நீக்கி இருக்கிறது. எஞ்சிய 2 ஆட்டங்களுக்கான அணியின் பயிற்சியாளர் பொறுப்பை உதவி பயிற்சியாளர் இஷ்பாக் அகமது கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.