ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை பந்தாடியது மும்பை


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை பந்தாடியது மும்பை
x
தினத்தந்தி 24 Feb 2021 11:30 PM GMT (Updated: 24 Feb 2021 11:30 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது.

கோவா,

கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 105-வது லீக்ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது. மும்பை வீரர் பிபின் சிங் ஹாட்ரிக் கோல் (38, 47, 86-வது நிமிடம்) அடித்தார். 

இந்த சீசனில் பதிவான முதல் ஹாட்ரிக் இதுவாகும். ஏற்கனவே அரைஇறுதியை எட்டி விட்ட மும்பை அணிக்கு இது 11-வது வெற்றியாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story