கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா அணி முதல் வெற்றி


கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 20 Jun 2021 1:14 AM GMT (Updated: 2021-06-20T06:44:35+05:30)

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது.

இந்த போட்டி தொடரில் பிரேசில்லாவில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா-உருகுவே அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. அர்ஜென்டினா வீரர் ரோட்ரிக்ஸ் 13-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் உருகுவே அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முதலாவது ஆட்டத்தில் சிலியுடன் டிரா (1-1) கண்டு இருந்த அர்ஜென்டினா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை சிலி அணி வீரர் பென் பிரெர்டன் 10-வது நிமிடத்தில் அடித்தார். முதல் ஆட்டத்தில் டிரா கண்டு இருந்த சிலி அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். பொலிவியாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.

Next Story