கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நவம்பர் 19-ந் தேதி தொடக்கம் + "||" + ISL,India's premier football tournament,set to start from November 19

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நவம்பர் 19-ந் தேதி தொடக்கம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நவம்பர் 19-ந் தேதி தொடக்கம்
11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடருக்கான முதல் கட்ட போட்டி அட்டவணையை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.
கோவாவில் உள்ள 3 மைதானங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. போட்டி நவம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 115 ஆட்டங்களில் தற்போது முதல் 55 ஆட்டங்களுக்கான (ஜனவரி 9-ந் தேதி வரையிலான) அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. எஞ்சிய போட்டிக்கான அட்டவணை டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் இரவு 7.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 9.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு ஆட்டம் நடைபெறும் நாட்களில் முதலாவது ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
(ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது.