கால்பந்து

சாம்பியன் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி + "||" + Champions League football: Manchester City win

சாம்பியன் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி

சாம்பியன் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி  வெற்றி
சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் , 

சாம்பியன் லீக் கால்பந்து  இன்று   நடைபெற்ற  ஆட்டத்தில்  மான்செஸ்டர் சிட்டி - (பி .எஸ் .ஜி)  பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில்  முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை ,ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 50  -வது நிமிடத்தில் பி .எஸ். ஜி அணியின் கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார் . பி .எஸ். ஜி  அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது .

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் 63 -வது  நிமிடத்திலும் ,கேப்ரியல் ஜீசஸ் 76 -வது  நிமிடத்திலும் கோல் அடித்தனர் .

இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாம்பியன் லீக் கால்பந்து: தோல்வியில் இருந்து தப்ப உதவிய ரொனால்டோ கோல்
நேற்று நடைபெற்ற கால்பந்து லீக் ஆட்டத்தில் அட்லாண்டா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது .