கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து: அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொரோனாவால் ஒத்திவைப்பு! + "||" + Arsenal vs Wolves Premier League game postponed due to COVID-19

பிரீமியர் லீக் கால்பந்து: அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொரோனாவால் ஒத்திவைப்பு!

பிரீமியர் லீக் கால்பந்து: அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொரோனாவால் ஒத்திவைப்பு!
கடந்த வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
லண்டன் ,

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா தொற்று எதிரொலியால்  ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடைசியாக, லிவர்பூல்-லீட்ஸ் மற்றும் வோல்வ்ஸ்-வாட்போர்டு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்ட்டுள்ள 15-வது போட்டி இதுவாகும்.

வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரெர்ஸ்(வோல்வ்ஸ்) அணியில் போதுமான எண்ணிக்கையில் வீரர்கள் இல்லை என்ற காரணத்தால் இந்த போட்டியை தள்ளி வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் மாற்று வீரர்கள் போதிய அளவில் இல்லாதாதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் இந்த தொடரில் பங்கேற்கும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.70 கோடிக்கு ஏலம் போன கால்பந்து ஜாம்பவான் மரடோனா டீசர்ட்-யின் பின்னணி என்ன தெரியுமா?
மரடோனாவின் புகழ்பெற்ற டீசர்ட் ஒன்று லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தால் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
2. சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; இறுதிப்போட்டியில் கேரளா - மேற்கு வங்கம் பலப்பரிட்சை!
இறுதி ஆட்டத்தில், இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன
3. சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; பஞ்சாப் அணி அபார வெற்றி!
மற்றொரு ஆட்டத்தில் கேரளா - மேகாலாயா அணிகள் களம் கண்டன.
4. கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு - கண்ணீர் மல்க வேண்டுகோள்
நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை இறந்துவிட்டதாக ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.
5. 75-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை பந்தாடியது மேற்கு வங்கம்!
தொடக்க ஆட்டத்தில் மேற்கு வங்கம் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது.