இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஐதராபாத் - ஒடிசா அணிகள் இன்று மோதல்


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஐதராபாத் - ஒடிசா  அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 28 Dec 2021 5:43 AM GMT (Updated: 28 Dec 2021 5:43 AM GMT)

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத் - ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத் - ஒடிசா  அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐதராபாத் அணி தாங்கள் விளையாடிய 7 போட்டிகளில்  3 வெற்றி , 3 டிரா , 1 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது .ஒடிசா  அணி தாங்கள் விளையாடி உள்ள  7 போட்டிகளில் 3 வெற்றி 3 தோல்வி, 1 டிரா  கண்டு புள்ளி பட்டியலில் 7 -வது இடத்தில் உள்ளது.

Next Story