ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது சென்னை


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது சென்னை
x
தினத்தந்தி 2 Jan 2022 8:17 PM GMT (Updated: 2022-01-03T01:47:56+05:30)

சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்து 4-வது வெற்றியை ருசித்தது.

கோவா, 

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்து 4-வது வெற்றியை ருசித்தது. வெற்றிக்குரிய கோலை 31-வது நிமிடத்தில் சென்னை வீரர் லுகாஸ் ஜிகிவிக்ஸ் அடித்தார். 

கேரளா பிளாஸ்டர்ஸ்-எப்.சி. கோவா இடையிலான மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஒடிசா-மும்பை அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.


Next Story