ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை -கோவா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து :  சென்னை -கோவா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 8 Jan 2022 9:39 AM GMT (Updated: 8 Jan 2022 9:39 AM GMT)

இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோவா -சென்னை அணிகள் மோதுகின்றன

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில்   இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோவா -சென்னை அணிகள் மோதுகின்றன 

சென்னை அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி ,2 டிரா ,3 தோல்வி என்று புள்ளி பட்டியலில் 6 வது  இடத்தில் உள்ளது. கோவா அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி ,3 டிரா ,4 தோல்வி என்று புள்ளி பட்டியலில் 9 வது  இடத்தில் உள்ளது.

Next Story