ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூரு


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூரு
x
தினத்தந்தி 10 Jan 2022 10:27 PM GMT (Updated: 10 Jan 2022 10:27 PM GMT)

நேற்று இரவு நடந்த 56-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். 

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் டேனிஷ் பரூக் பட் 8 வது நிமிடத்தில் ஒரு கோலும், பிரின்ஸ் பரா 23 வது நிமிடத்திலும் 45+5 வது நிமிடத்திலும் என 2 கோல்களும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.


Next Story