அர்ஜென்டினா: கால்பந்து போட்டியில் நடந்த மோதலில் ரசிகர் உயிரிழப்பு..!


அர்ஜென்டினா: கால்பந்து போட்டியில் நடந்த மோதலில் ரசிகர் உயிரிழப்பு..!
x

போலீசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர்.

அர்ஜென்டினா,

அர்ஜென்டினாவில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மைதானம் முழுவதும் நிரம்பிய நிலையில், மேலும் ரசிகர்கள் வந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

அப்போது போலீசாருக்கும். ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவத்தில் ஒரு ரசிகர் இறந்தார். சிலர் காயம் அடைந்தனர்.

போலீசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர். உடனே போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர்.


Next Story