சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி
x

Image Courtesy : UEFA Champions League

இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தயில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முனிச் ,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி 2வது சுற்று போட்டியில் பேயர்ன் முனிச் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தயில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணியின் எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 83வது நிமிடத்தில் பெனால்ட்டி உதவியுடன் பேயர்ன் முனிச் அணியின்

கிம்மிச் கோல் அடித்தார்.

இதனால் ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலையில் முடிந்தது.

பேயர்ன் முனிச் - மான்செஸ்டர் சிட்டி , மோதிய கால்இறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.

இதனால் ஒட்டு மொத்தத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது


Next Story