சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி
x

Image Courtesy : UEFA Champions League 

இரு அணி வீரர்களும் முதல்பாதியில் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை

லண்டன் ,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி 2வது சுற்று போட்டியில் செல்சியா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தயில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் .இரு அணி வீரர்களும் முதல்பாதியில் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் இருந்தது .

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ரியல் மாட்ரிட் அணியின் ரோட்ரிகோ 58வது கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 80வது நிமிடத்தில் ரோட்ரிகோ கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

பதில் கோல் அடிக்க செல்சியா அணி வீரர்கள் போராடியும் பலன் அளிக்கவில்லை. இதனால் முடிவில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

ரியல் மாட்ரிட் - செல்சியா மோதிய கால்இறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஒட்டு மொத்தத்தில் ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது


Next Story