பிபா உலககோப்பை கால்பந்து : ரசிகர்கள் தீவிரம்- இதுவரை 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை..!


பிபா உலககோப்பை கால்பந்து : ரசிகர்கள் தீவிரம்- இதுவரை 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை..!
x

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு, இதுவரை 24 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தோஹா,

22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன.உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன.

இந்த நிலையில் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு, இதுவரை 24 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிபா, இதுவரை 24 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த ரசிகர்கள், அதிகளவில் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக பிபா தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சுற்று டிக்கெட் விற்பனைக்கான தொடக்க தேதி, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் எனவும் பிபா தெரிவித்துள்ளது.


Next Story