ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி, நைஜீரியா அணிகள் காலிறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி, நைஜீரியா அணிகள் காலிறுதிக்கு தகுதி
x

Image Tweeted By @FIFAWWC 

ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் , நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

புவனேஸ்வர்,

ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் , நியூசிலாந்தை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல் புவனேஸ்வரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆப்பிரிக்க அணியான நைஜீரியா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. 'ஏ'பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடனும், 2-வது போட்டியில் மொராக்கோவுடன் தோல்வி அடைந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று பிரேசில் அணியை எதிர்கொள்கிறது.


Next Story