4 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி 'சாம்பியன்'


4 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன்
x

கோப்புப்படம் 

இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக மகுடம் சூடியது.

புவனேஷ்வர்,

3-வது கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி (இன்டர்கான்டினென்டல் கோப்பை) ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, லெபனான், வனாட்டு, மங்கோலியா ஆகிய அணிகள் கலந்து கொண்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியாவும், லெபனானும் நேற்றிரவு இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டியது.

விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் கையே சற்று ஓங்கி இருந்தது. என்றாலும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 46-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சர்வதேச போட்டியில் அவரது 87-வது கோலாகும். 65-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் லாலியன்ஜூலா சாங்தே கோல் போட்டார்.

முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக மகுடம் சூடியது. இந்த தொடரில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காத இந்திய அணி தற்போதைய வெற்றியின் மூலம் தரவரிசையில் 101-வது இடத்தில் இருந்து மீண்டும் டாப்-100 இடத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story