ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

சென்னை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் குவாம் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து ரஹீம் அலி ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னையின் எப்.சி அணி 8 போட்டிகளுக்குப் பிறகு வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story