கால்பந்து சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் மான்செஸ்டர் அணி திரில் வெற்றி


கால்பந்து சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் மான்செஸ்டர் அணி திரில் வெற்றி
x

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.

மான்செஸ்டர்:

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டி மான்செஸ்டர் சிட்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆஸ்டன் வில்லா ஆகிய இரு அணிகளும் மோதின

இப்போட்டியில் ஆஸ்டன் விலா 33வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. பின்னர் தொடர்ந்து 69 வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது. இதையடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிரடியாக 76 வது நிமிடத்தில் தனது முதல் கோல் அடித்தது. பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து 76 மற்றும் 81-வது நிமிடங்களில் 2 கோல்களை அடித்தது. இதில் இல்கே குண்டோகன் இரு கோல்களை அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

இதன்மூலம் போட்டியின் முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த நிலையில் அதிரடியாக விளையாடி 3 கோல்களை அடித்து ஸ்டேடியத்தில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆட்டம் முழுவதும் தலையில் கையை வைத்து சோகத்தில் இருந்த ரசிகர்கள் இறுதியில் வெற்றி பெற்றதை கண்டு ஸ்டேடியத்தின் மைதானத்தில் வந்து துள்ளி குதித்து கொண்டாடினர்.

மான்செஸ்டர் அணியின் உக்ரேனிய டிஃபெண்டர் ஒலெக்சாண்டர் ஜின்சென்கோ வெற்றியின் முடிவில் தனது நாட்டின் கொடியில் கோப்பையை போர்த்தி, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


Related Tags :
Next Story