மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கால்பந்து போட்டி: நசரத்பேட்டை அணி வெற்றி


மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கால்பந்து போட்டி: நசரத்பேட்டை அணி வெற்றி
x

கோப்புப்படம் 

முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுக்கு புல்லட் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை ஊராட்சியில் கால்பந்து போட்டி நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக விளையாடிய நசரத்பேட்டையைச் சேர்ந்த ஆர்த்தி செலக்ட் அணி வெற்றி பெற்றது. மித்ரன் செலக்ட் அணி 2-வது இடத்தை பிடித்தது.

முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுக்கு புல்லட் பரிசாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சா.மு.நாசர், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.டி.சரவணன், என்.டி.வரதன், என்.கே.வெங்கட், என்.என்.காமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story