சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: ஏ.ஜி.அலுவலகம்-சுங்க இலாகா ஆட்டம் 'டிரா'


சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: ஏ.ஜி.அலுவலகம்-சுங்க இலாகா ஆட்டம் டிரா
x

கோப்புப்படம்

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஏ.ஜி.அலுவலகம்-சுங்க இலாகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 34-வது நிமிடத்தில் சுங்க இலாகா வீரர் ரஞ்சித் தடுத்த பந்து கோல் வளையத்துக்குள் புகுந்து சுயகோலானது. 55-வது நிமிடத்தில் சுங்க இலாகா வீரர் அஜய் பதில் கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் நேதாஜி கிளப்-இந்தியன் வங்கி (காலை 6.30 மணி), ஐ.சி.எப்.-சுவராஜ் கிளப் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story