சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி: சுங்க இலாகா அணியிடம் வருமான வரி தோல்வி


சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி: சுங்க இலாகா அணியிடம் வருமான வரி தோல்வி
x

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வருமான வரி-கலால் வரி அணிகள் சந்திக்கின்றன.

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த திரில்லிங்கான ஆட்டத்தில் சுங்க இலாகா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தியது.

சுங்க இலாகா அணியில் நிதிஷ் 43-வது நிமிடத்திலும், ஸ்ரீராம் 67-வது நிமிடத்திலும், அஜய் 81-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். வருமான வரி அணி தரப்பில் ஷூபம் 78-வது நிமிடத்திலும், சூசை ராஜ் கடைசி நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வருமான வரி-கலால் வரி அணிகள் சந்திக்கின்றன.


Next Story