தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்:  இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : : Indian Football Team  

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா - லெபனான் அணிகள் மோதின.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா - லெபனான் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதி முடிவில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து நடந்த 2வது பாதியிலும் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை . 90 நிமிடம் முடிந்து ஆட்டம் 0 - 0 என சமநிலையில் இருந்ததால் கூடுதல் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத்தால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் லெபனான் அணி 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது.

இதனால் இந்திய அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.வரும் 4 ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - குவைத் அணிகள் மோதுகின்றன.


Next Story