முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: தமிழக தபால் துறை அணி அபாரம்


முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: தமிழக தபால் துறை அணி அபாரம்
x

தமிழக தபால் துறை அணி 6-0 என்ற கோல் கணக்கில் இக்பால் கிளப்பை வீழ்த்தியது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழக தபால் துறை அணி 6-0 என்ற கோல் கணக்கில் இக்பால் கிளப்பை துவம்சம் செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் கனரக வாகன தொழிற்சாலை அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப்பை வீழ்த்தியது. செயின்ட் பால்ஸ் கிளப் 3-0 என்ற கோல் கணக்கில் யுனிவர்சல் கிளப்பை தோற்கடித்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் சேப்பாக் யங்ஸ்டர்-செயின்ட் ஜார்ஜ் (பிற்பகல் 3 மணி), பிரண்ட்ஸ் கிளப்-அடையார் யுனைடெட் கிளப் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story