ஹாக்கி

பெல்ஜியம் ஜூனியர் ஆண்கள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஆக்கி அணி ‘டிரா’ + "||" + In the match against Belgium Junior Men's Team Indian women's team 'draw'

பெல்ஜியம் ஜூனியர் ஆண்கள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஆக்கி அணி ‘டிரா’

பெல்ஜியம் ஜூனியர் ஆண்கள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஆக்கி அணி ‘டிரா’
ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று பெல்ஜியத்தை சேர்ந்த ஜூனியர் ஆண்கள் அணியுடன் மோதியது.

ஆன்ட்வெர்ப்,

ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று பெல்ஜியத்தை சேர்ந்த ஜூனியர் ஆண்கள் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ராணி தலைமையிலான இந்திய அணி இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தவறியதால் வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் போய் விட்டது. இந்திய அணியில் நிக்கி பிரதான், வந்தனா கட்டாரியா தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய பெண்கள் அணி அடுத்து லேடிஸ் டென் போஸ்ச் கிளப்புடன் மோத உள்ளது.