ஹாக்கி

4 நாடுகள் ஆக்கி: இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி + "||" + 4 countries Hockey: India failed in the final match

4 நாடுகள் ஆக்கி: இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி

4 நாடுகள் ஆக்கி:
இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி
பெல்ஜியம், நியூசிலாந்து, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இடையிலான ஆண்கள் அழைப்பு ஆக்கி போட்டி நியூசிலாந்தில் நடந்து வந்தது.
தரங்கா,

பெல்ஜியம், நியூசிலாந்து, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இடையிலான ஆண்கள் அழைப்பு ஆக்கி போட்டி நியூசிலாந்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதிசுற்றில் இந்திய அணி பெல்ஜியத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. பெல்ஜியம் அணியில் டாம் பூன் (4-வது நிமிடம்), செபாஸ்டியன் டாக்கியர் (36-வது நிமிடம்) ஆகியோரும், இந்திய அணியில் மன்தீப்சிங்கும் (19-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

இந்த 4 அணிகளும் 2-வது கட்டமாக மீண்டும் விளையாட உள்ளன. 24-ந்தேதி நடக்கும் இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.