ஹாக்கி

அஸ்லான் ஷா ஆக்கி இந்தியா 2-வது தோல்வி + "||" + Azlan Shah Akaki India 2th defeat

அஸ்லான் ஷா ஆக்கி இந்தியா 2-வது தோல்வி

அஸ்லான் ஷா ஆக்கி இந்தியா 2-வது தோல்வி
அஸ்லான் ஷா ஆக்கியில் இந்தியா 2-வது முறையாக தோல்வியடைந்தது.
இபோக்,

6 அணிகள் இடையிலான 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 43-வது நிமிடத்திற்குள் 4 கோல்களை திணித்து கலங்கடித்தது. மார்க் நோலெஸ், ஜாலேவ்ஸ்கி, டேனியல் பீலே, பிளாக் கோவெர்ஸ் ஆகியோர் அந்த அணியில் கோல் அடித்தனர். கடைசி கட்டத்தில் சற்று தாக்குப்பிடித்து ஆடிய இந்தியா 2 கோல்களை மட்டும் திருப்பியது. ரமன்தீப்சிங் இந்த இரண்டு கோல்களையும் (52 மற்றும் 53-வது நிமிடம்) அடித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துடன் ‘டிரா’ கண்டது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து (பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-இங்கிலாந்து (பிற்பகல் 3.30 மணி), இந்தியா-மலேசியா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.