ஹாக்கி

மகளிர் ஹாக்கி: ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி + "||" + Women's hockey: India won the match against Spain

மகளிர் ஹாக்கி: ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

மகளிர் ஹாக்கி: ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
மகளிர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. #WomensHockey
மேட்ரிட்,

ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி தொடரின் 5-வது ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 4-1 என அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

முன்னதாக ஸ்பெயின் அணி இரு ஆட்டங்களிலும், இந்திய அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தன. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய கேப்டன் ராணி ராம்பால், குர்ஜித் கவுர் ஆகியோர் அற்புத ஆட்டத்தால் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராணி, குர்ஜித் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஸ்பெயின் அணியின் சார்பில் லோலா ரியரா ஒரு கோல் அடித்தார். இந்திய அணி பெற்ற இந்த வெற்றி மூலம் ஹாக்கி தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது.
தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
2. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
4. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு
இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
5. சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை வழங்கி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...