ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிஜப்பானை பந்தாடியது + "||" + Asian Champions Cup Hocky Indian team Hat trick win Bundled Japan

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிஜப்பானை பந்தாடியது

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிஜப்பானை பந்தாடியது
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
மஸ்கட்,

5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனையும், 2-வது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பானை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த இந்திய அணி கச்சிதமாக ஆடி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜப்பான் திணறியது. இந்திய அணியினர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்கள். இந்திய அணியினரின் தற்காப்பு அரணை தகர்த்து ஜப்பான் அணியினரால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.

முடிவில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்தது. இந்திய அணியில் மன்தீப்சிங் 3 கோலும் (4-வது, 49-வது, 57-வது நிமிடங்களில்), ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும் (17-வது, 21-வது நிமிடங்களில்), குர்ஜந்த் சிங் (8-வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (36-வது நிமிடம்), சுமித் (42-வது நிமிடம்), லலித் உபாத்யாய் (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங் களில் தென்கொரியா- ஓமன் (இரவு 8.25 மணி), இந்தியா- மலேசியா (இரவு 10.40 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.