‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2–வது வெற்றி


‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2–வது வெற்றி
x
தினத்தந்தி 26 Oct 2018 9:00 PM GMT (Updated: 26 Oct 2018 8:16 PM GMT)

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 6–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 6–2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் சாய் அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி–தெற்கு ரெயில்வே (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story