ஹாக்கி

தேசிய ஆக்கி: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி + "||" + National Hockey: Tamilnadu team won 'hatrick'

தேசிய ஆக்கி: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

தேசிய ஆக்கி: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.
சென்னை,

9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் எழும்பூரில் ‘ஜி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 5-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியை தோற்கடித்தது. தமிழக அணியில் ராயர் வி.வினோத் 3 கோலும், செல்வகுமார், சண்முகம் தலா ஒரு கோலும் போட்டனர். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்த தமிழக அணி, ஐ.சி.எப். மைதானத்தில் நாளை நடக்கும் தனது கடைசி லீக்கில் இமாசலபிரதேசத்தை சந்திக்கிறது. ‘இ’ பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லியையும், ராஜஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளாவையும் வென்றது.