12 அணிகள் பங்கேற்கும் தென்மண்டல ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


12 அணிகள் பங்கேற்கும் தென்மண்டல ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 21 April 2019 9:30 PM GMT (Updated: 21 April 2019 7:59 PM GMT)

ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் அமைப்பு சார்பில் தென்மண்டல ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 1–ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் அமைப்பு சார்பில் தென்மண்டல ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 1–ந்தேதி வரை நடக்கிறது. எஸ்.டி.ஏ.டி.(கோவில்பட்டி), ஜி.எஸ்.டி. (சென்னை), செயின்ட்பால்ஸ், இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப், வருமானவரி, லயோலா கல்லூரி உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்–அவுட் முறையில் இந்த போட்டி நடக்கிறது. முதல் நாளான இன்று செயின்ட்பால்ஸ்– எஸ்.டி.ஏ.டி (பிற்பகல் 3 மணி), இந்தியன் வங்கி– சென்னை ஆக்கி சங்கம் (மாலை 4.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதே ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டியும் நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்று முதல் 26–ந்தேதி வரை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு சேர்மன் ரவிகுமார் டேவிட், செயலாளர் எரிக் கிறிஸ்டோபர் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story