ஹாக்கி

புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா + "||" + Pro League Hockey: India beat Netherlands again

புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா
புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது.
புவனேசுவரம்,

முன்னணி 9 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் 3-ம் நிலை அணியான நெதர்லாந்தை தோற்கடித்து முழுமையாக 3 புள்ளிகளை பெற்றது. இந்த நிலையில் அந்த அணியை நேற்று இந்தியா மீண்டும் எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய இந்தியா கடைசி 10 நிமிடங்களில் எழுச்சி பெற்றது. மன்தீப்சிங் (51-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (55-வது நிமிடம்) ஆகியோர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கி, ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தனர். வழக்கமான நேரத்தில் ஆட்டம் சமன் ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2 புள்ளிகளை தட்டிச்சென்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் இதே மைதானத்தில் அடுத்த மாதம் 8 மற்றும் 9-ந்தேதிகளில் மோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.
2. புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
3. எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி
எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான 2-ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய பெடரர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரர் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.
5. 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.