ஹாக்கி

புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி + "||" + Pro League Hockey: India lose to Australia

புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
புவனேசுவரம்,

9 அணிகள் இடையிலான புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவுடன் மல்லுகட்டியது. இதில் இந்திய அணியின் தடுப்பு அரணை உடைத்தெறிந்த ஆஸ்திரேலியாவின் கை ஆரம்பத்திலேயே பலமாக ஓங்கியது. டைலன் வோதர்ஸ்பூன் (6-வது நிமிடம்), டாம் விக்ஹாம் (18-வது நிமிடம்), லாச்லன் ஷார்ப் (41-வது நிமிடம்), ஜாக்கப் ஆண்டர்சன் (42-வது நிமிடம்) ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு மத்தியில் இந்திய வீரர் ராஜ்குமார் பால் 36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார்.


ஒரு கட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் மோசமாக பின்தங்கி இருந்தது. கடைசி கட்டத்தில் ராஜ்குமார் பால் (47-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (52-வது நிமிடம்) ஆகிய இந்தியர்கள் கோல் போட்டு ஆறுதல் அளித்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் இன்று மீண்டும் இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.
2. புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா
புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது.
3. புரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
புரோ லீக் ஆக்கி போட்டியின், தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.