ஹாக்கி

மாநில ஆக்கி: சென்னை அணி 2-வது வெற்றி + "||" + State Hockey: Chennai Team 2 wins

மாநில ஆக்கி: சென்னை அணி 2-வது வெற்றி

மாநில ஆக்கி: சென்னை அணி 2-வது வெற்றி
மாநில ஆக்கி போட்டியில், சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை அணி 6-0 என்ற கோல் கணக்கில் கடலூரை தோற்கடித்தது. சென்னை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். மற்ற ஆட்டங்களில் தூத்துக்குடி அணி 9-0 என்ற கோல் கணக்கில் நாகப்பட்டினத்தையும், மதுரை அணி 5-1 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலையையும், தேனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் தென்காசியையும், நெல்லை அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரியையும், நீலகிரி அணி 6-0 என்ற கோல் கணக்கில் விருதுநகரையும், தஞ்சாவூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருச்சியையும், தர்மபுரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரியையும், அரியலூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் நாமக்கல்லையும், ராமநாதபுரம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் திருவள்ளூரையும், வேலூர் மாவட்ட அணி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டையும், தூத்துக்குடி அணி 3-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல்லையும், மதுரை அணி 4-0 என்ற கோல் கணக்கில் தேனியையும் தோற்கடித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில கைப்பந்து: சென்னை அணி ‘சாம்பியன்’
மாநில கைப்பந்து போட்டியில், சென்னை அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
2. மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றி
மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றிபெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி கோல் மழை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி கோல் மழை பொழிந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது.