இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயர் + "||" + The largest hockey stadium in India to be named after tribal freedom fighter Birsa Munda
இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயர்
இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயரிடப்பட்டது.
ரூர்கேலா
20,000 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் அமைந்துள்ளது. ரூர்கேலாவில் உள்ள புதிய சர்வதேச ஹாக்கி மைதானத்திற்கு ‘பிர்சா முண்டா’ பெயரிடப்பட்டு உள்ளது. இது ஹாக்கி உலகக் கோப்பை 2023 போட்டிகளை நடத்த மிக நவீன ஹாக்கி மைதானமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஹாக்கி ஸ்டேடியம் தளம் பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் அமைந்துள்ளது, இது மாநிலத்தின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மைதானம் வர்த்தக விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ரூர்கேலா வான்வழிப் பாதையை ஒட்டியுள்ளது.