கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு


கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 31 March 2021 7:17 PM GMT (Updated: 31 March 2021 7:17 PM GMT)

கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.

புதுடெல்லி, 

11-வது தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிம்டிகாவில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜார்கண்ட் உள்பட 26 அணிகள் பங்கேற்க இருந்தன. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த சமயத்தில் போட்டியை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று மாநில சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஜார்கண்ட் ஆக்கி சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய ஆக்கி இந்தியா அமைப்பு தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டியை காலவரையின்றி தள்ளிவைப்பதாக நேற்று அறிவித்தது. வீராங்கனைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று ஆக்கி இந்தியா தலைவர் ஞானேந்திர நிங்கோம்பாம் தெரிவித்துள்ளார். 


Next Story