ஹாக்கி

இந்திய ஆக்கிக்கு மிகப்பெரிய தருணம்-ராணி ராம்பால் + "||" + To the Indian Hocky The biggest moment Raani Rampaul

இந்திய ஆக்கிக்கு மிகப்பெரிய தருணம்-ராணி ராம்பால்

இந்திய ஆக்கிக்கு மிகப்பெரிய தருணம்-ராணி ராம்பால்
இந்திய ஆக்கிக்கு இது மிகப்பெரிய தருணமாகும். இந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அரைஇறுதிக்கு வந்து இருக்கிறோம்.
வெற்றிக்கு பிறகு இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘இந்திய ஆக்கிக்கு இது மிகப்பெரிய தருணமாகும். இந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அரைஇறுதிக்கு வந்து இருக்கிறோம். அணியை நினைத்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். களத்தில் நமது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டு இருந்தோம். அதனை சரியாக செய்து இருக்கிறோம்’ என்றார்.

ஒலிம்பிக்கில் முதல்முறையாக கோல் அடித்த இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கூறுகையில், ‘இந்த வெற்றிக்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். அரைஇறுதிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சியான உணர்வை அளிக்கிறது. எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கு நன்றி. இந்த அணி ஒரு குடும்பம் போல் செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சியாளர்களும் அடங்குவார்கள். ஒட்டுமொத்த தேசமும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் எங்களுடன் இருக்கிறது’ என்றார்.