பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு


பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 2 March 2022 12:13 AM GMT (Updated: 2 March 2022 12:13 AM GMT)

இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

அம்ஸ்டர்டம்,

15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து, சீனா, நியூசிலாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தையும் (ஜூலை 3), 2-வது ஆட்டத்தில் சீனாவையும் (ஜூலை 5), கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தையும் (ஜூலை 7) எதிர்கொள்கிறது.


Next Story