ஆசிய கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்


ஆசிய கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
x
தினத்தந்தி 27 April 2022 10:22 PM GMT (Updated: 27 April 2022 10:22 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது.

ஜகர்தா, 

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் மே 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிட்டது. இதில் பங்கேற்
கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா, ஓமன், வங் காளதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’சுற்றுக்கு முன்னேறும்.
தொடக்க நாளில் (மே 23) நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பரம போட்டியாளரான முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன்மோதுகிறது. 

அதைத் தொடர்ந்து மே 24-ந் தேதி ஜப்பானையும், மே 26-ந் தேதி இந்தோனேஷியாவையும் இந்தியா
எதிர்கொள்கிறது. 

Next Story