2023 உலகக் கோப்பை ஹாக்கி : இங்கிலாந்து, ஸ்பெயின் ,வேல்ஸ் அணிகளுடன் 'டி' பிரிவில் இந்தியா


2023 உலகக் கோப்பை ஹாக்கி : இங்கிலாந்து, ஸ்பெயின் ,வேல்ஸ்   அணிகளுடன் டி பிரிவில் இந்தியா
x
தினத்தந்தி 8 Sep 2022 11:25 AM GMT (Updated: 8 Sep 2022 11:25 AM GMT)

2023 ஆம் ஆண்டு உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது.

இந்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.ஏ,பி,சி,டி பிரிவுகளில் இடம் பெற்றுள்ள அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.அதன்படி இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

'ஏ' பிரிவு அணிகள் :

ஆஸ்திரேலியா .அர்ஜென்டினா ,பிரான்ஸ் ,தென் ஆப்பிரிக்கா.

'பி' பிரிவு அணிகள் :

பெல்ஜியம் ,ஜெர்மனி ,கொரியா , ஜப்பான்.

'சி' பிரிவுகள் அணிகள் ;

நெதர்லாந்து ,நியூசிலாந்து, மலேசியா,சிலி

'டி' பிரிவு அணிகள் :

இந்தியா ,இங்கிலாந்து,ஸ்பெயின்,வேல்ஸ்


Next Story