டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு தபால் துறை அணி அரைஇறுதிக்கு தகுதி


டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு தபால் துறை அணி அரைஇறுதிக்கு தகுதி
x

தமிழ்நாடு தபால் துறை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வேளச்சேரி கிளப்பை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

சென்னை,

முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கனரக வாகன தொழிற்சாலை அணி 1-0 என்ற கோல் கணக்கில் சேப்பாக் யங்ஸ்டர்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

ரஞ்சித் வெற்றிக்கான கோலை அடித்தார். மற்றொரு கால்இறுதியில் அடையார் யுனைடெட் கிளப் 3-0 என்ற கோல் கணக்கில் ரிசர்வ் வங்கியை சாய்த்தது. இன்னொரு கால்இறுதியில் தமிழ்நாடு தபால் துறை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வேளச்சேரி கிளப்பை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இதே போல் மெட்ரான் ரெஜிமன்ட் மையம் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்.வி.அகாடமியை வென்றது.

இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் கனரக வாகன தொழிற்சாலை-அடையார் யுனைடெட் கிளப் (பிற்பகல் 1.30 மணி), தமிழ்நாடு தபால் துறை-மெட்ராஸ் ரெஜிமன்ட் மையம் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story