முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: ஏர் இந்தியா-எம்.சி.சி. ஆட்டம் 'டிரா'


முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: ஏர் இந்தியா-எம்.சி.சி. ஆட்டம் டிரா
x

முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டியில் ஏர் இந்தியா-எம்.சி.சி. ஆட்டம் டிராவில் முடிந்தது.



சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அடையார் யுனைடெட் கிளப் 4-0 என்ற கோல் கணக்கில் ஹபிபுல்லா நினைவு கிளப்பை தோற்கடித்தது. அடையார் யுனைடெட் அணியில் ராஜேந்திரன், முருகவேல் தலா 2 கோல் அடித்தனர். ஏர் இந்தியா-எம்.சி.சி. அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஏர் இந்தியா அணியில் ஆலென் 2 கோலும், ரியாஸ், மணி தலா ஒரு கோலும், எம்.சி.சி. தரப்பில் கருணாமூர்த்தி, விஜயகுமார், ரோகித், நவீன் ராஜ் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் லிங்கராஜ் நினைவு கிளப் 11-0 என்ற கோல் கணக்கில் இக்பால் கிளப்பை விரட்டியடித்தது. லிங்கராஜ் கிளப் அணியில் நாகராஜன் 4 கோலும், அஜய் 3 கோலும், சக்திவேல் 2 கோலும், எலியா, விக்னேஷ் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ரிசர்வ் வங்கி-ஹோம்லி கிளப் (பிற்பகல் 2 மணி), எச்.வி.எப்.-யூத் விங் (பிற்பகல் 3 மணி), செயின்ட் பால்ஸ் கிளப்-எம்.ஆர்.சி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story