ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு


ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு
x

ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு இந்திய அணி வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ஜனவரி 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜன.13-ந்தேதி ஸ்பெயினை சந்திக்கிறது.

இந்த நிலையில் ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு இந்திய அணி வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.பிர்ஸா சர்வேதேச ஹாக்கி ஸ்டேடியம்வளாகத்தில் அணைத்து நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.


Next Story