தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 166 வீரர்–வீராங்கனைகள்
33–வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் வருகிற 16–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,
33–வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் வருகிற 16–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 166 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் அணியில் நிதின், குரு ஜவகர், அஜித்குமார் உள்பட 85 வீரர்களும், பெண்கள் அணியில் ராமலட்சுமி, வித்யா, நித்யா, சத்யா உள்பட 81 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story