பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசை: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதலிடம் + "||" + Badminton ranking: Indian captain Srikanth topped

பேட்மிண்டன் தரவரிசை: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதலிடம்

பேட்மிண்டன் தரவரிசை: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதலிடம்
சர்வதேச பேட்மிண்டன் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் (76,895 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

புதுடெல்லி, 

சர்வதேச பேட்மிண்டன் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் (76,895 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 4 சூப்பர் சீரிஸ் போட்டிகளை வென்று சாதனை படைத்த ஸ்ரீகாந்த் தொடர்ந்து சிறப்பான ஆட்டது திறனை வெளிப்படுத்தி வருவதால் ‘நம்பர் ஒன்’ அரியணையை முதல்முறையாக அலங்கரித்துள்ளார். உலக சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) காயம் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் 75,470 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கம்ப்யூட்டர் தரவரிசை முறை அறிமுகம் ஆன பிறகு நம்பர் ஒன் இடத்தை பிடித்த 2–வது இந்தியர் ஸ்ரீகாந்த் ஆவார். ஏற்கனவே 2015–ம் ஆண்டில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வந்தார். கம்ப்யூட்டர் தரவரிசை முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக 1980–ம் ஆண்டில் இந்திய ஜாம்பவான் பிரகாஷ் படுகோனே ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்துள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...