பிற விளையாட்டு

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2018: இந்திய அணி வெற்றி + "||" + Thomas and Uber Cup 2018: India Women's Winning Team

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2018: இந்திய அணி வெற்றி

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2018: இந்திய அணி வெற்றி
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை வென்றது. #ThomasAndUberCup
பாங்காக்,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் சாய்னா நேவால் தலைமையிலான மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.


இதில் சாய்னா 2-0 (21-14, 21-19) என்ற செட்கணக்கில் சுவான்-யு வெண்டி சென்-ஐ வென்றார். வைஷ்ணவி ரெட்டி 2-0 (21-17, 21-13) என்ற கணக்கில் ஜெனிபர் டாமை வீழ்த்தினார். அனுரா பிரபுதேசாய் 2-0 (21-6, 21-7) என எசிலி பங்கையும், இரட்டையர் பிரிவில் சனியோகிதா-கோர்பட இணை வென்றது. ஆனால் மற்றொரு இணையான மேக்னா-பூர்விஷா தோல்வியடைந்தது. முன்னதாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் கனடாவிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்திய அணி அடுத்து ஜப்பான் அணியை வெல்ல வேண்டும்.