ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் சாய்னா நேவால் பேட்மிண்டன் கால் இறுதியில் தோல்வி


ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் சாய்னா நேவால் பேட்மிண்டன் கால் இறுதியில் தோல்வி
x
தினத்தந்தி 20 Aug 2018 6:08 AM GMT (Updated: 20 Aug 2018 6:08 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டன் கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளான இன்று மகளிர் அணிக்கான பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் ஜப்பானின் நோஜோமி ஒகுஹரா ஆகியோர் இன்று விளையாடினர்.

இதில், சாய்னா நேவால் முதல் செட்டில் 7-11 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினார்.  தொடர்ந்து முதல் செட்டை நோஜோமி 11-21 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சென்றார்.

இதனை தொடர்ந்து 2வது செட்டை சாய்னா நேவால் 25-23 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பினை ஏற்படுத்தினார்.  ஆனால் 3வது செட்டை 16-21 என்ற புள்ளி கணக்கில் நோஜோமி கைப்பற்றினார்.

இதனால் நோஜோமி 11-21, 25-23, 16-21 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்றார்.


Next Story