செபக்தக்ராவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்


செபக்தக்ராவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
x
தினத்தந்தி 20 Aug 2018 9:45 PM GMT (Updated: 20 Aug 2018 8:34 PM GMT)

செபக்தக்ராவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைப்பது உறுதியானது.

ஆசிய விளையாட்டு செபக்தக்ரா போட்டியில் இந்திய ஆண்கள் அணி 21-16, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் ஈரானை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதியை எட்டியதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியானது. செபக்தக்ரா, கைப்பந்து ஸ்டைலில் விளையாடப்படும் ஒரு போட்டியாகும். ஆனால் பந்தை கையால் அடிப்பதற்கு பதிலாக காலால் உதைத்து மறுபக்கம் தள்ளுவார்கள்.

இந்திய செபக்தக்ரா சம்மேளன பொதுச்செயலாளர் யோஜெந்திரா சிங் தாஹியா கூறுகையில், ‘இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடு இதுவாகும். ஆசிய விளையாட்டில் செபக்தக்ராவில் இந்திய அணி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாயாகும்’ என்றார். இந்திய அணி அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் தாய்லாந்தை இன்று சந்திக்கிறது.

Next Story